KEDA
காவேரியின் புதிய மைல்கற்கள்: மாணவர் சீருடை வழங்கலும் இணையத்தளச் செயலி அறிமுகமும்.
காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றிய மாணவர்களுக்கான சீருடை வழங்கலும், காவேரி அமைப்புகளுக்கான இணையத்தளச் செயலி அறிமுகமும் சிறப்பாக நடைபெற்றன. கல்விப் பணிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் அனுசரணையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
18 October 2026 · காவேரி விளையாட்டுக் கழகம் & காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியம்

“நற்கல்வி – அறிவுசார் சமுதாயம்”
எமது காவேரி விளையாட்டுக் கழகத்தின் வரலாற்றில் மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்த முக்கிய நிகழ்வுகளாக, மாணவர்களுக்கான சீருடை அறிமுகமும் வழங்கலும் மற்றும் இணையத்தளச் செயலி அறிமுகமும் சிறப்பாக நடைபெற்றன.
மாணவர்களுக்கான சீருடை அறிமுகமும் வழங்கலும்
எமது காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாணவர்களுக்கான சீருடைகள், எமது கழகத்தின் மூத்த உறுப்பினரும் மதிப்பிற்குரியவருமான திரு. அ. சஜீவன் அவர்களின் பூரண அனுசரணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டன.
அவர் தரம் 04 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான பூரண அனுசரணையாளராகவும் செயற்பட்டு வருகின்றமை எமக்குப் பெருமையளிக்கின்றது. அவரது அர்ப்பணிப்பிற்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இணையத்தளச் செயலி அறிமுகம்
எமது காவேரி விளையாட்டுக் கழகம் மற்றும் காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய இரு அமைப்புகளுக்குமான இணையத்தளச் செயலி, எமது கழகத்தின் மூத்த உறுப்பினரும் மதிப்பிற்குரியவருமான திரு. பா. மதன்ராஜ் அவர்களின் பூரண அனுசரணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது எமது அமைப்புகளின் வளர்ச்சியிலும், நவீன தொழில்நுட்பத்தின் ஊடாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இம்முயற்சிக்கு ஆதரவளித்த அவருக்கு எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தரம் 05 மாணவர்களுக்கான தொடர்ச்சியான அனுசரணை
ஆரம்பம் முதல் இன்றுவரை எமது தரம் 05 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பூரண அனுசரணை வழங்கிவரும் மதிப்பிற்குரிய திரு. க. மகாலிங்கம் ஐயா (M&S குடும்பம்) அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுடன் அவர் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவு, எமது கல்விசார் பணிகளுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
மனமார்ந்த நன்றிகள்
இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு வழிகளில் பங்களித்த அனைத்து அனுசரணையாளர்கள், எமது ஆசான், பாடசாலை அதிபர்கள், கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது காவேரி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பயணிக்கும் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!
ஒன்றிணைவோம்! ஒத்துழைப்போம்! கல்வியால் உயர்வோம்!
காவேரி விளையாட்டுக் கழகம் மற்றும்
காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியம்,
பெரியநீலாவணை.




































































































































